Wednesday, September 5, 2012

உடைந்த சொந்தம் ஒட்டாது


உடைந்த சொந்தம் ஒட்டாது

நீ வளரும் வரை உன்னை  ஊக்குவித்த உன் சுற்றம் நீ வளர்ந்து வாழ துவங்கினால் உன்னை கண்டு பொறாமை படிக்கிறது! அப்படி இருக்கும் அந்த சுற்றத்தை நினைக்கும் பொழுது என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

அவர்களுடன் கை கோர்த்து விளையாடிய காலங்கள் ஒரு புறம் இருக்க அவர்களை கண்டாலே ஒதுங்கும் நிலை ஏற்படும் பொழுது மனம் நொந்து விடுகிறது 
ஒரு விதத்தில் இவர்களின் உண்மையான நிறத்தை அறிந்து கொண்டோமே என்று மகிழ்வதா? இல்லை அவர்களின் உறவு முறிந்ததே என்று நினைத்து வருந்துவதா?!

சரி காலம் பதில் சொல்லும் என்ற எண்ணமும் நாள் அடைவில் அழிந்து விடுகிறது - ஏன் எனில் மனிதர்களின் மனம் நடந்த விழயங்களை அவ்வபொழுது புரட்டி பார்க்கிறது. 
மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தையை நாமும் மறந்து விட்டோம் சுற்றமும் மறந்துவிட்டது.

பரவா இல்லை நம் அண்ணன் தானே, தம்பி தானே என்று பழகிய காலங்கள் எல்லாம் இன்று ஏடுகளில் மட்டுமே மிஞ்சுகிறது.. "உடைந்த கண்ணாடி ஒட்டாது என்பது உண்மை தான்" என்ற எண்ணம் மட்டுமே மிஞ்சுகிறது.

சுற்றத்தாரின் மனம் சாத்தானின் கருவறை ஆகிவிட்டது, அவன் இதை செய்து விட்டான், அதை வாங்கி விட்டான் நாமும் வாங்க வேண்டும் இல்லை எனில் அதை செய்ய வேண்டும், வாங்க வசதி இல்லை எனில் அவர்களின் மனதில் எழும் வார்த்தைகளை   பதிவு செய்தால் கேட்கவே நாராசமாக இருக்கும் அத்தனை கொடுரம் நிறைந்து உள்ளது. எங்கிருந்து வருகிறது இந்த எண்ணங்கள் நாம் வளரும் பொழுது அப்படி பழக வில்லையே, எங்கிருந்து கற்றார்கள் இதை??

வருத்ததுடன் விடை பெறுகிறேன்!